இங்கு தனிமையிலே வெறுமை இந்த வெறுமையினை பொல்லாத தனிமையினை அகற்றவென்று தேடுகின்றேன் மனிதர்களை
Tuesday, May 4, 2010
சிரி! சிரி! வயிறு குலுங்கச் சிரி!!
கணவன்: மருந்துப் போத்தலை ஏன் தலையில் தடவியபடி இருக்கிறாய்?
மனைவி: டாக்டர் தான் தலை வலிச்சா இதை தடவச் சொன்னார்.
கணவன்: தடவச் சொன்னபடியால் தப்பித்தாய், குடிக்கச் சொல்லியிருந்தால், போத்தலை உடைத்து சாப்பிட்டிருப்பாய்.
டாக்டர்: நோயாளி ஒரு மணி நேரத்துக்கு முன்பே இறந்து விட்டார்.
மோகன்: இருக்காதே நான் 15 நிமிடத்துக்கு முந்தி அவருடன் கதைத்தேனே.
டாக்டர்: நீங்கள் தானே கதைதீர்கள் அவர் கதைக்கவில்லையே.
ஒருவர்: எல்லா டாக்டர்களும் ஏன் நின்று கொண்டே சத்திர சிகிச்சை செய்கிறார்கள்
மற்றவர்: கடவுளாக நம்புகிறோம் என்று சொல்வதால் அவர்களும் நின்றே கொல்லுகிறார்கள்
மேலதிகாரி: கொலை வழக்கை உங்களிட்டை ஒப்படைச்சோமே என்ன கண்டு பிடித்தீர்கள்
காவலர்: கொலை செய்யப்பட்டவர் கொலை செய்யப்படுவதற்கு 2 நிமிடங்களுக்கு முன்பு கூட உயிருடன் இருந்திருக்கிறார்
டாக்டர்: உடம்பு பலமாவதற்கு மருந்து எழுதித் தந்தேனே ஒழுங்காகக் குடித்தீர்களா
நோயாளி: மூடியைத் திறக்க முடியவில்லையே டாக்டர் அதுக்காகத் தான் இப்போ வந்திருக்கிறேன்
தலைவர்: மரத்துக்கெல்லாம் திரிசா, நமீதா, அசின் என்று தலைவர் பேர் வைக்கிறாரே ஒன்றும் விளங்குது இல்லை
தொண்டர்: அப்பிடிப் பேர் வைச்சாத்தானாம் எல்லோரும் மரத்தை கவனமாக வளர்ப்பினமாம்
வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச் சுவைக்கு www.tamilsworld.net இணையத் தளத்தை பார்வையிடுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment