Sunday, October 11, 2009

நாமா பயங்கரவாதிகள்?

காட்டுமிராண்டிச் சிங்களவன்
கையில் ஆயுதம் இல்லா எம்மவரை
நிர்வாணமாக்கி கை கட்டி கண் கட்டி
சுட்டுத் தள்ளுவதை
கண்ட பின்பும்
நாமா பயங்கரவாதிகள்?
இழிவான இந்தியாவே
கயவனான கருணாநிதியே
எம் இனத்தை அழித்து
நம் குருதி குடித்த போதையிலே
ஏப்பம் விடுகின்றீர்!
எம் குழந்தைகளே உமைக் கண்டால்
காறித் துப்பும் உம் முகத்தினிலே

விச வாயுவால் எம்மவரை
மூச்சுத் திணறடித்துக் கொன்றார்கள்
எரிவாயுவினால் நம்மவர்கள்
கொத்துக் கொத்தாய் கருகிச் செத்தார்கள்
கற்பிணித் தாய்மாரும்
தன் தாயின் பால் குடித்த குழ‌ந்தைகளும்
கொடிய சிங்களத்தின் செல்லடியில்
செத்து மடிந்தார்கள்
கையேந்தி நின்றோம் உலகத்தை நோக்கி
வேடிக்கை பார்த்தீர்கள் நீங்க‌ளெல்லாம்
அள்ளி அள்ளிக் கொடுத்தீர்க‌ள்
ஆயுத‌மெல்லாம்...
எம்மை அழிப்ப‌த‌ற்காய்
உரிமை வேண்டும் என்றோம்
சமத்துவம் கோரி நின்றோம்
மனிதனாய் வாழ வழி தாருமென்றோம்
இன்று வதை முகாம்களில்
அணு அணுவாய்ச்
செத்துக் கொண்டிருக்கின்றோம்
இன்னும் நாமா பயங்கரவாதிகள்?

No comments: