Friday, January 30, 2009

தீப் பிழம்பாகிய தியாகி - முத்துக்குமார்

முத்துக்குமாரா
தமிழனுக்காய் உயிர் கொடுத்தாய் நீ
ஈழத் தமிழன் அவலம் பொறுக்காமல்
உன்னையே நீ அழித்தாய்
தீப் பிழம்பாய் நீ எரிந்து
உன்னை நீயே கொடுத்தாய்
தமிழன் விடிவிற்காய்
இந்திய அரசு கேட்குமா இதையெல்லாம்?
தியாகி திலீபனையே கொன்றவர்கள்
கேட்பார்கள் உன் கோரிக்கையை
என்றா எதிர்பார்த்தாய்?
ஏன் இந்த முடிவெடுத்தாய்?
எம் நெஞ்செல்லாம்
இரத்தக் கண்ணீர் வடிக்கிறதே
அறிவாயா எம் முத்துக்குமரா?

ஈழமக்களின் மனத்தினிலே
நீ ஓர் பெரிய மாவீரன்
எம் வலி பொறுக்க முடியாமல்
தீப் பிழம்பாகிய தியாகி நீ
ஈழம் மலரும் ஓர் நாள்
முத்தான எம் முத்துக் குமரன்
வீர நாயகனாய் வீற்றிருப்பான்
எம் மக்கள் மத்தியிலே
திண்ணமிது திடமாகச் சொல்கின்றேன்

வாழ வேண்டியவன் நீ
எமக்காக இன்னும் போராட வேண்டியவன் நீ
வீரத் தமிழன் நீ
மற்றவர்க்காய் மரணித்த
யேசுவையும் விஞ்சியவன் நீ
ஈழ்த்தமிழருக்காய் சிலுவை சுமந்தவன் நீ
மற்றவரின் விடிவிற்காய்
உன்னையே எரித்தவன் நீ!

என்னமாய் வலித்திருக்கும்
உன் உடலெல்லாம்
தமிழன் விடிவிற்காய்
தாங்கினாய் வலி எல்லாம்
ஈந்தாய் உன் உயிர்தனையே
தமிழன் வாழ்விற்காய்
நன்றி சொல்ல ஓர் வார்த்தையில்லை
வணங்கி நிற்கின்றோம்
நல் வாழ்வு வாழ்வேண்டும் நீ
வானகத்தே எம் மாவீரருடன்.

1 comment:

rahini said...

நன்றி சொல்ல ஓர் வார்த்தையில்லை
வணங்கி நிற்கின்றோம்

unmaithaan
arumaiyaana kavithai