நீதிமன்றில் ஓர் வழக்கு
மனைவி அவள்
சுமத்துகிறாள் பல குற்றங்கள்
கணவன் மீது
வீட்டு வாடகையின்
அரைப் பங்கு
ஆறு மாதமாய் தரவில்லை
சமையல் வேலையில்
சரி பாதி சரியாகச்
செய்வதில்லை
காருக்குப் பெற்றோல்
அடிப்பதில்
கணக்குப் பிழைக்கிறது
கேட்டால்
இப்போ வருமானம்
சரியாக இல்லை என்கின்றார்
விவாகரத்து வேண்டுமென்றாள்
இடை மறித்த நீதிபதி
கேட்டார்
ஏன் வேண்டும் விவாகரத்து
பிரிய வேண்டும் உடனே
சொன்னாள் மனைவியவள்
சிரித்தார் நீதிபதி
இனி என்ன பிரிவு
வேண்டும் உமக்கு
எல்லாமே பிரிவாகத் தானே
இருக்கிறது
குடும்பம் என்றால்
எல்லாமே கூட்டுப்
பொறுப்புத்தான்
விட்டுக் கொடுப்புக்கள்
உனது எனது என்றில்லாமல்
எல்லாமே எமது
என்பது தான் குடும்பம்
எப்போ என் பணம் உன் பணம்
என்று கூறு வந்தாச்சோ
அன்றே பிரிவு
ஆரம்பமாகிறது
அதுவே விவாகரத்தில்
முடிகிறது..
கூறிச் சிரித்தார்
மீண்டும் நீதிபதி
No comments:
Post a Comment