Monday, June 16, 2008

ராணுவத்தின் வேட்டுக்கள்

பசியும் பட்டினியும்
கொலையும் கொள்ளையும்
கடத்தலும் கப்பம் கேட்டு மிரட்டுவதும்
வான்குண்டுத் தாக்குதலும்
கிளைமோரின் வெடிப்புகளும்
அகதியாய் இடம் பெயர்வுகளும்
அநியாயச் சாவுகளும்
இவையே எம் மண்ணில்
அன்றாட நிகழ்வுகளாய் ஆனபோதும்
விடிந்த பொழுதில் விழித்தெழுந்து
அல்லும் பகலும் அயராதுழைத்து
அம்மாவையும் அக்கா தங்கையையும்
அரணாகக் காத்து நின்ற
சின்னஞ் சிறுவனையும்
விட்டு வைக்கவில்லை
ராணுவத்தின் வேட்டுக்கள்.

1 comment:

Anonymous said...

உலகம் உணரும் நாள் விரைவிலே
பொழுது புலரும் நாள் விரைவிலே
ஈழம் மலரும் நாள் விரைவிலே
இந்தியா ஏற்கும் நாள் விரைவிலே
தமிழர் உள்ளங்களே உழைத்திடுவோம்
தரணி புரிந்திடவே பரப்பிடுவோம்!