Monday, October 22, 2007

வெளிக்கிடடி தமிழ் ஈழத்ற்கு

போதுமடி போதும்! இவ்வளவும் போதும்!
நாட்டிலை நானிருந்தால் இப்போ
நல்ல சருகை வேட்டி கட்டி சால்வையை முறுக்கி
வீர நடை நடந்திருப்பேன்
இங்கேயோ நீளக் கால்ச்சட்டை
நிக்கவே விடுகுதில்லை
அதுக்கை ஒரு சப்பாத்து
காலை நசுக்கி நுள்ளித் தொல்லை தருகிறது
அண்டைக்கு வேட்டியைக் கட்டச் சொன்னாய்
கடுங் குளிரிலை எல்லாமே விறைச்சுப் போச்சு
டாக்குத்தரிட்டை மருந்துக்குப் போனால்
அடுத்த சமருக்குத்தான் விறைப்பெடுபடுமாம்
வெளிக்கிடடி தமிழ் ஈழத்திற்கு
இப்பவே வெளிக்கிடடி தமிழ் ஈழத்திற்கு!

ஊரிலை இருந்தோம் நாம் எப்படி ஒற்றுமையாய்
அங்கே வருத்தம் எண்டு நான் படுத்தால்
பாக்கவெண்டு வரும் சனக் கூட்டம்
இங்கை வருத்தம் எண்டு நான் படுக்க
நல்ல பிளான் போடுறேனாம்! காசெடுக்கப் போறேனாம்!
சொல்லிறாங்கள் நாக்கூசாமல்
வெளிக்கிடடி தமிழ் ஈழத்திற்கு
இப்பவே வெளிக்கிடடி தமிழ் ஈழத்திற்கு!

ஈழத்தில் பெண்கள்தான் போராட முன்னணியில்
இங்கேயோ அடுத்தவன்ரை குடும்பத்தை
அவதூறாய்ப் பேசுவதில் அவர்கள்தான் முன்னணியில்
வதந்தி கொண்டோட வாச்சிருக்கு இவர்களுக்கு
சில ஆண் துணைகள்
இதுகளோடை வாழப் பிடிக்கவில்லை எனக்கு
வெளிக்கிடடி தமிழ் ஈழத்திற்கு!
இப்பவே வெளிக்கிடடி தமிழ் ஈழத்திற்கு!

உதவி புரிவோர்கள் உள்ளார்கள்
எம்நாட்டில் பெருமளவில்
அலட்டிக் கொள்வதில்லை அவர்கள் பெரிதாக
இங்கோ சிறிதாக உதவி செய்தாலும்
தம்பட்டமடித்தே தம்மைப் புகழ்ந்திடுவார்
காலை மாலையென கதைத்தே
எமை வதைத்திடுவார்
காணுமிந்த வாழ்க்கை
வெளிக்கிடடி தமிழ் ஈழத்திற்கு!
இப்பவெ வெளிக்கிடடி தமிழ் ஈழத்திற்கு!

கார் உண்டு, வீடுண்டு
கனமான தங்க நகைகள் உண்டு
தொலைக்காட்சியுண்டு
பல ரகமான தொலைபேசிகளுமுண்டு
கணனியுண்டு கமராக்கள் பலவுண்டு
இன்னும் உண்டு எல்லாமே இங்குண்டு
இருந்தென்ன? மனத்தில் இல்லாததொன்றுண்டு
அதை நாடிப் போகின்றேன் நான் தமிழ் ஈழம்
உனக்கும் விருப்புண்டால்
வெளிக்கிடடி தமிழ் ஈழத்திற்கு!
இப்பவே வெளிக்கிடடி தமிழ் ஈழத்திற்கு!

9 comments:

நளாயினி said...

"எல்லாமே இங்குண்டு
இருந்தென்ன? மனத்தில் இல்லாததொன்றுண்டு
அதை நாடிப் போகின்றேன் நான் தமிழ் ஈழம்
உனக்கும் விருப்புண்டால்
வெளிக்கிடடி தமிழ் ஈழத்திற்கு!"

நாம் வாழ்ந்த பழைய வாழ்வு நமக்கு எங்போனாலும் கிடைப்பதில்லை. அதனால் தான் மனதில் எல்லொருக்கும் ஏதோ ஒரு வெறுமை குடிகொண்டுவிடுகிறது. ஆனாலும் இப்போது அங்கும் இதே நிலமை தானே. நிம்மதியாக வாழ்ந்துவிடமுடியும் என்கிறீர்களா?

நளாயினி said...

எல்லாமே இங்குண்டு
இருந்தென்ன? மனத்தில் இல்லாததொன்றுண்டு
அதை நாடிப் போகின்றேன் நான் தமிழ் ஈழம்
உனக்கும் விருப்புண்டால்
வெளிக்கிடடி தமிழ் ஈழத்திற்கு!

"நாம் வாழ்ந்த பழைய வாழ்வு நமக்கு எங்போனாலும் கிடைப்பதில்லை. அதனால் தான் மனதில் எல்லொருக்கும் ஏதோ ஒரு வெறுமை குடிகொண்டுவிடுகிறது. ஆனாலும் இப்போது அங்கும் இதே நிலமை தானே. நிம்மதியாக வாழ்ந்துவிடமுடியும் என்கிறீர்களா?"

பொன் சிவராசா said...

உண்மைதான், நிலமை ஈழத்திலும் நிம்மதியாக இல்லை. ஆனால் ஓடி வந்த இங்கும் எம்மவர் சரியாக இல்லையே. என்னதான் செய்வது?

பொன் சிவராசா

கானா பிரபா said...

vaazhthtukkal, anpudan varavetkinren

பொன் சிவராசா said...

நன்றி கானா பிரபா

Anonymous said...

6 கோடி தமிழ் மக்களே எங்களை காப்பாற்றுங்கள்....கரம் ஏந்தி நிற்கின்றோம்...உங்கள் தொப்புள் கொடி உறவு நாங்கள்....வாசித்து பார்த்துவிட்டு என்ன செய்வது என்று விட்டு விடாமல் ஏதாவது செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் ..............

நீங்கள் எங்களுக்காக செய்த ஆர்ப்பாட்டங்களுக்கு நன்றி....நாளுக்கு நாள் எங்கள் உறவுகளில் ஒருவன் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காவதை நீங்கள் அறீவீர்கள்....

என்றும் அன்புடன்
இலங்கைப்பெண்...

எல்லா செய்திகளிலும் இதை பின்னூட்டம் ஆக இடுகின்றேன்.

து.மது said...

இங்கு தனிமையிலே வெறுமை இந்த வெறுமையினை பொல்லாத தனிமையினை அகற்றவென்று தேடுகின்றேன் மனிதர்களை......



வரவேற்கிறேன்.......

பொன் சிவராசா said...

தர்மினி!

புலம் பெயர் நாடுகளில் வசிப்பவர்கள் என்றும் தம் உறவுகளின் நிம்மதிக்காய் தம்மால் இயன்றதைச் செய்வார்கள்.

பொன் சிவராசா

பொன் சிவராசா said...

மது!

உங்கள் ஆதரவிற்கு நன்றி.

பொன் சிவராசா