Monday, March 29, 2010

இரு முறை பிறந்தேன்

அம்மாவின் வயிற்றினிலே
பத்து மாதங்கள்
சுகமாய் தரித்திருந்து
இப் பூமிப் பந்தினில்
முதல் முறையாய்
பிறந்தேன் நான்
காலங்கள் ஓடியது
கல்யாணம் செய்துகொண்டேன்
வேதனைகள் சோதனைகள்
ஒவொன்றாய் வந்தபோது
ஒடிந்து போனேன்
நான் நானாக இல்லாதபோது
உயிர் தந்தாள்
வாழ வழி தந்தாள்
என் அன்பு மனைவியுமே
பிறந்தேன் நானும்
இரண்டாம் முறையாக!

Monday, March 22, 2010

காதல் கதை பேசும் கண் சிமிட்டும்

என் கைகளில் வலுவில்லை
கவிதைகள் வடிப்பதற்கு
மனம் மட்டும் அவளிற்காய்
ஓர் கவிதை புனைய விழைகிறது
மை தொட்டு காகிதத்தில் கை பரப்பி
எழுதவில்லை இக் கவிதை
இரத்தக் குழாய்களினால்
உதிரத்தை மை ஆக்கி
இதயத்தின் சுவர்களிலே வரைந்த கவிதை இது

இளமையிலே இனிதாக இருந்த வேளை
எழுதிக் குவித்தேன் நான் கவிதைகளை
ஒவ்வொன்றும் காதல் கதை பேசும்
கண் சிமிட்டும் கை அசைத்து
முத்தமிட்டு கவி பாடும்
என் கவிதைக்காய் தவமிருப்பாய்
என் கவிதைக்குள் நீ இருந்தாய்
உன்னுள்ளே என் கவிதை
உயிர்ப்பாய் உறவாடும்

என் வரவிற்காய் காத்திருப்பாய்
உறவிற்காய் தவமிருப்பாய்
அரவணைப்பாய் ஆரத் தழுவிடுவாய்
எனைக் காணாது
சில மணித் துளிகள் போனாலும்
மனம் ஒடிந்து துடிதுடித்துப் போய்விடுவாய்

இன்று
உடல் தளர்ந்து உளம் நொந்து
முதியோர் இல்லத்தில்
நான் முனகும் இக் கவிதை
கேட்பதற்கோ நீ இல்லை
என் அருகினிலே
நாட் கணக்காய்
மகளிர் மன்றம் என்றும்
மாரியம்மன் கோவில் என்றும்
மாறி மாறி ஓடித் திரிகின்றாய்
மறக்க முடியா
எம் காதல் நினைவுகளை
கவிதையாய் வடித்துவிட்டேன்
வந்து கேட்க மாட்டாயோ ஓர் முறை!

Sunday, March 21, 2010

கேட்க மாட்டாயோ ஓர் முறை

என் கைகளில் வலுவில்லை
கவிதைகள் வடிப்பதற்கு
மனம் மட்டும் அவளிற்காய்
ஓர் கவிதை புனைய விழைகிறது
மை தொட்டு காகிதத்தில் கை பரப்பி
எழுதவில்லை இக் கவிதை
இரத்தக் குழாய்களினால்
உதிரத்தை மை ஆக்கி
இதயத்தின் சுவர்களிலே வரைந்த கவிதை இது

இளமையிலே இனிதாக இருந்த வேளை
எழுதிக் குவித்தேன் நான் கவிதைகளை
ஒவ்வொன்றும் காதல் கதை பேசும்
கண் சிமிட்டும் கை அசைத்து
முத்தமிட்டு கவி பாடும்
என் கவிதைக்காய் தவமிருப்பாய்
என் கவிதைக்குள் நீ இருந்தாய்
உன்னுள்ளே என் கவிதை
உயிர்ப்பாய் உறவாடும்

என் வரவிற்காய் காத்திருப்பாய்
உறவிற்காய் தவமிருப்பாய்
அரவணைப்பாய் ஆரத் தழுவிடுவாய்
எனைக் காணாது
சில மணித் துளிகள் போனாலும்
மனம் ஒடிந்து துடிதுடித்துப் போய்விடுவாய்

இன்று
உடல் தளர்ந்து உளம் நொந்து
முதியோர் இல்லத்தில்
நான் முனகும் இக் கவிதை
கேட்பதற்கோ நீ இல்லை
என் அருகினிலே
நாட் கணக்காய்
மகளிர் மன்றம் என்றும்
மாரியம்மன் கோவில் என்றும்
மாறி மாறி ஓடித் திரிகின்றாய்
மறக்க முடியா
எம் காதல் நினைவுகளை
கவிதையாய் வடித்துவிட்டேன்
வந்து கேட்க மாட்டாயோ ஓர் முறை!